மேற்கு வங்கத்தில் நேர்மையான மற்றும் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையம் அம்மாநில காவல்துறையில் மேற்கொண்டுள்ளது.
முதல்வர் மம்தா பானர்ஜியின் ‘சிண்டிகேட்’ முறையை இந்த இடமாற்றங்கள் உடைத்துள்ளதாகவும், மம்தா பானர்ஜி தனக்கு சாதகமான அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி, அதன் மூலம் வன்முறையை தூண்ட முயல்வதாகவும் கூறப்பட்ட நிலையில் மம்தா பானர்ஜியின் மொத்த திட்டத்தையும் தேர்தல் ஆணையம் மூலம் மத்திய அரசு காலி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கையின்படி, மாநில காவல்துறை டிஜிபி-யாக சித்த நாத் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கொல்கத்தா காவல் ஆணையராக அஜய் குமார் நந்த் நியமிக்கப்பட்டுள்ளார். பிர்பூம், கூக்பெஹார் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களுக்கும் புதிய எஸ்பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மம்தா பானர்ஜியின் பிடியிலிருந்து காவல்துறையை விடுவித்து, நல்ல பின்னணி கொண்ட அதிகாரிகளை கொண்டு வந்திருப்பது தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கும் என பாஜக பிரமுகர் ராகுல் சின்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று, மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

