இந்தியா

5 மாநில தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏறும்!.. அதிர்ச்சி கொடுத்த ராகுல் காந்தி

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்கி வருவதால் இந்தியாவிலுள்ள பல நாடுகளிலும் கச்சா எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் பல உணவகங்கள் மூடப்பட்டிருக்கிறது. திறக்கப்பட்டிருக்கும் உணவகங்களிலும் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டிருக்கிறது .எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பலரும் வேலை இழந்திருக்கிறார்கள். நாடு முழுவதும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் தட்டுப்பாடு என்கிற செய்தி வெளியானவுடனேயே பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதேநேரம் சமையல் சிலிண்டர் விலை மட்டும் ரூ.20 உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இன்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ‘5 மாநில தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளை பாஜக அரசு உயர்த்திவிடும்.. எரிபொருள் பிரச்சனை சமாளிக்க மோடி அரசிடம் எந்த ஒரு திட்டமிடலும் இல்லை’ எனக் கூறியிருக்கிறார்..

மேலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 100ஐ நோக்கி சரிந்து வருவதும், தொழில் துறைக்கான டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதும் வரவிருக்கும் விலைவாசி உயர்வின் அறிகுறியே. இதன் எதிரொலியால் உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும்.. சிறு குறு தொழில்கள் பாதிக்கப்படும் எனவும் ராகுல் தெரிவித்திருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்