சினிமா

ரூ.1,000 கோடி வசூலை நெருங்கும் ‘துரந்தர்’ 2.. ஆனால் கணவருக்கு வாழ்த்து சொல்லாத தீபிகா படுகோன்.!

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர்’ மற்றும் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ ஆகிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகின்றன. இப்படத்தின் முதல் பாகம் சுமார் ரூ.1,400 கோடி வசூலித்து மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், மார்ச் 19 அன்று வெளியான இரண்டாம் பாகமான ‘ரிவெஞ்ச்’ திரைப்படமும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் வெளியான சில நாட்களிலேயே ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருப்பதால், இதுவும் ரூ.1,000 கோடி வசூலைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு பிறகு ரூ.1,000 கோடி வசூல் பட்டியலில் இணைந்த நடிகர் என்ற பெருமையை ரன்வீர் சிங் பெற்றுள்ளார். இருப்பினும், ரன்வீர் சிங்கின் இந்த மாபெரும் வெற்றி குறித்து அவரது மனைவியும் நடிகையுமான தீபிகா படுகோன் எந்தவொரு வாழ்த்துகளையும் சமூக வலைதளங்களில் பகிராதது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

நீண்ட காலமாக திரையுலகில் இருந்தாலும், ரன்வீர் சிங்கிற்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தை தேடித்தந்த படங்களாக ‘துரந்தர்’ வரிசைப் படங்கள் அமைந்துள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்