உதய்பூரில் கோலாகலமாக நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு, நட்சத்திர தம்பதிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா தற்போது தாய்லாந்தின் கோ சாமுய் தீவில் தங்களது தேனிலவை கொண்டாடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படம் ஒன்றில், இருவரும் ஒரு படிக்கட்டில் அமர்ந்து ஒருவரையொருவர் காதலுடன் பார்த்து கொள்ளும் காட்சி ரசிகர்களை நெகிழ செய்துள்ளது. ஆடம்பர விடுதிகளை தவிர்த்து, கடற்கரையை நோக்கிய ஒரு தனிப்பட்ட வில்லாவில் தங்கி தங்களது பொன்னான நேரத்தை இவர்கள் செலவிட்டு வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 26 அன்று இவர்களது திருமணம் நடைபெற்றது, அதனை தொடர்ந்து மார்ச் 4 அன்று ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தங்கள் மகிழ்ச்சியை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இனிப்புகளை வழங்கியதுடன், பல்வேறு கோயில்களில் அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் இவர்களது சார்பில் இனிப்புகள் விநியோகிக்கப்பட்டன. எளிமை மற்றும் தனித்துவத்துடன் கூடிய இவர்களது திருமண வாழ்வு, பலரது ஆசீர்வாதங்களுடன் இனிதே தொடங்கியுள்ளது.

