பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 தொடர் தொடங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், அத்தொடரில் பங்கேற்கவிருக்கும் சர்வதேச வீரர்களுக்கு ஆயுதம் ஏந்திய ஒரு அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேரில் மிட்செல் போன்ற முன்னணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், மீறி வந்தால் அவர்களின் பாதுகாப்பிற்கு தங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
மேற்கு ஆசியப் போர் மற்றும் எரிபொருள் விலை உயர்வை காரணம் காட்டி, இந்த ஆண்டு போட்டிகளை இரண்டு நகரங்களில் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது விடுக்கப்பட்டுள்ள இந்த நேரடி மிரட்டல் வீரர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டாம் என அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. மார்ச் 26-ஆம் தேதி தொடங்கவிருக்கும் இந்த தொடரின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

