இலங்கை

சமையல் எரிவாயு கையிருப்பு போதுமானதாக உள்ளது – அரசாங்கம் தகவல்!

அரசு மற்றும் தனியார் விநியோகஸ்தர்களின் திட்டமிடப்பட்ட விநியோகங்களின் அடிப்படையில் எதிர்வரும் மாதங்களில் சமையல் எரிவாயு விநியோகம் போதுமானதாக இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மார்ச் 28 ஆம் திகதி 22,000 மெட்ரிக் தொன்னும், அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் மேலும் 22,000 மெட்ரிக் தொன் திரவ பெட்ரோலிய எரிவாயுவும் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு வரும் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

அதேநேரம், தனியார் விநியோக நிறுவனமான லாஃப்ஸ் கேஸ், மார்ச் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் 8,000 மெட்ரிக் தொன்கள், ஏப்ரல் 25-27 ஆகிய திகதிகளில் 21,000 மெட்ரிக் தொன்கள் என திரவ பெட்ரோலிய எரிவாயுவை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக அரசாங்கத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளது.

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் வழக்கமாக உள்ளூர் சந்தைக்கு மாதத்திற்கு 7,000 முதல் 8,000 மெட்ரிக் தொன்கள் வரை சமையல் எரிவாயுவை விநியோகம் செய்கிறது.

இரு விநியோகஸ்தர்களிடமிருந்தும் வரும் ஒருங்கிணைந்த எரிவாயு அளவுகள் தேசிய தேவையை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

எனினும், விநியோகம் தொடர்பான சிக்கல்கள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

தேவைப்பட்டால் மேலதிக எரிவாயு ஏற்றுமதிகளைக் கையாளுவதற்காக ஹம்பாந்தோட்டையில் உள்ள தனது சேமிப்புக் கிடங்குகளை வழங்க லாஃப்ஸ் நிறுவனம் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பட்ட போது, ​​அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்