விளையாட்டு

ரிங்கு சிங்கிற்கு உபியில் அரசு பணி.. நியமன உத்தரவை வழங்கினார் முதல்வர் யோகி..!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், உத்தரப்பிரதேச அரசின் மண்டல விளையாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

2023 ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸர்களை விளாசி புகழ்பெற்ற ரிங்கு சிங், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார். சர்வதேச அளவில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டத்தின் கீழ் இந்த அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முகாமில் இருக்கும் ரிங்கு சிங், ஐபிஎல் 2026 தொடருக்கான அந்த அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜிங்க்யா ரஹானேவின் தலைமையின் கீழ் அவர் செயல்படவுள்ளார். சமீபத்திய டி20 உலகக்கோப்பை தொடரில் எதிர்பார்த்த அளவு விளையாடாதது மற்றும் தனது தந்தையின் மறைவு என தனிப்பட்ட முறையில் பல சவால்களை சந்தித்த போதிலும், அவரது விடாமுயற்சியை பாராட்டி இந்த கௌரவம் கிடைத்துள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் திகழ்வதாக யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்