தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மக்களிடம் வாக்குகளை வாங்க திமுகவும், அதிமுகவும் பல வாக்குறுதிகளை சொல்லி வருகிறது. திமுக இன்னமும் தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிடவில்லை. அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிக்காக காத்திருந்தது. சமீபத்தில் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
அதில், மகளிருக்கு உரிமை தொகையாக மாதம் 2 ஆயிரம் ரூபாய், ஆட்சிக்கு வந்தவுடன் சிறப்பு தொகையாக ரூ.10 ஆயிரம், ஒவ்வொரு பொங்கலுக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம், ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு விலையில்லா ஃபிரிட்ஜ் கொடுக்கப்படும் என அறிவித்தார்.
மேலும், மதுவிலக்கை படிப்படியாக குறைப்போம், மகளிர் போல ஆண்களுக்கும் அரசு பேருந்தில் இலவச பயணம், வீடு இல்லாதவர்களுக்கு அம்மா இல்ல திட்டம் மூலம் வீடு கட்டித்தரப்படும், 100 நாள் வேலை வாய்ப்பு 150 நாட்களாக உயர்த்தப்படும், முதியோர் ஓய்வூதியம் 2 ஆயிரம், மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரத்து என பல திட்டங்களையும் அறிவித்தார்.
இந்நிலையில், இலவச ஃபிரிட்ஜ் பற்றி கருத்து தெரிவித்த தவெக நாஞ்சில் சம்பத் ‘ வீட்டுக்கு ஒரு ஃபிரிட்ஜ் கொடுப்பதாக சொல்கிறீர்களே. இது சாத்தியமா?’ என அருகில் இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு தேர்தலுக்கு பின் வெற்றி பெற்றால் நான் ஃபிரிட்ஜ் என சொல்லவில்லை. பிரிஞ்சி சாதம் என மாற்றிவிடுவேன் என சொன்னாராம். ஆனால், எங்கள் தலைவர் விஜய் நடைமுறையில் என்ன சாத்தியமோ அதை மட்டுமே சொல்கிறார்’ என நக்கலடித்திருக்கிறார்.

