விளையாட்டு

கொச்சி மைதானத்திற்குள் இந்திய வீரர்களை உள்ளே விட மறுத்த நிர்வாகம்.. என்ன நடந்தது?

கொச்சியில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தகுதி சுற்றுப் போட்டிக்கு முன்னதாக, இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் காலித் ஜமீல் மற்றும் வீரர்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தின் வாடகை பாக்கி மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகை தொடர்பான சர்ச்சையாலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு கொச்சிக்கு திரும்பிய இந்திய அணிக்கு நேர்ந்த இந்த அவமரியாதை, இந்திய கால்பந்து நிர்வாகத்தின் குளறுபடிகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

சுமார் 20 முதல் 25 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை மற்றும் வாடகையை ஜிசிடிஏ நிர்வாகம் கோரிய நிலையில், கேரள கால்பந்து சங்கம் கால அவகாசம் கேட்டதால் மைதானத்தின் வாயில்கள் மூடப்பட்டன. இதனால் திட்டமிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பு மற்றும் பயிற்சி ரத்து செய்யப்பட்டது.

இது ஒரு சிறிய தொழில்நுட்ப கோளாறு என்றும், மார்ச் 31 அன்று ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்றும் கேஎஃப்ஏ தலைவர் நவாஸ் மீரான் உறுதியளித்துள்ளார். இருப்பினும், இது போன்ற தொடர்ச்சியான நிர்வாக தவறுகள் வீரர்களின் மனநிலையை பாதிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்