இந்தியா

இப்படியே போனா ஹோட்டல்களை மூடிவிடுவோம்!.. ஹோட்டல் சங்க தலைவர் பேட்டி!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுத்துள்ள நிலையில் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்வது தடைப்பட்டிருக்கிறது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் துபாய், சவுதி, அரேபியா, பஹரைன் போன்ற வளைகுடா நாடுகளில் இருந்துதான் பெரும்பாலான கச்சா எண்ணெயை வாங்குகிறது.. அந்த கச்சா எண்ணெய் மூலம்தான் கேஸ் சிலிண்டர் தயாரிக்கப்படுகிறது.. வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது.

ஆனால் போர் காரணமாக ஈரான் தனது ஹோர்முஸ் கடல் வழிப்பாதையை மூடிவிட்டது. அந்தபக்கம் ஏதேனும் எண்ணெய் கப்பல் வந்தால் ஈரான் அந்த கப்பலை தாக்குகிறது.

இதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்க்களில் பல ஹோட்டல்கள் மூடப்பட்டு விட்டது. திறக்கப்பட்டிருக்கும் ஹோட்டல்களிலும் உணவுகளின் விலை அதிகரித்துவிட்டது.

இந்நிலையில்தான் ஈரோடு மாவட்ட ஹோட்டல் சங்க தலைவர் தங்கவேல் செய்தியார்களிடம் பேசியபோது ‘ஹோட்டலுக்கு தினமும் 4 சிலிண்டர் தேவைப்படும் நிலையில் தற்போது வாரத்திற்கு மூன்று சிலிண்டர் மட்டுமே கிடைக்கிறது.. ஏற்கனவே சைனீஸ் உணவுகளை நிறுத்தி விட்டோம்.. சிலிண்டர் விலை ஏற்றம் ஹோட்டல் தொழிலை மேலும் பாதிக்கும்.. அரசு உடனே உடனடியாக தலையிட்டு வணிக சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி வழங்காவிட்டால் வரும் திங்கட்கிழமை முதல் ஹோட்டல்களை நடத்த முடியாத சூழல் ஏற்படும்’ என தெரிவித்திருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்