விளையாட்டு

நான் மட்டும் இப்போது ஐபிஎல் தலைவராக இருந்திருந்தால் லக்னோ அணியை தடை செய்திருப்பேன்: லலித் மோடி

ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் இடையே நடந்த காரசாரமான உரையாடல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மைதானத்திலேயே வீரர்களிடம் உரிமையாளர் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதம் குறித்து முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நான் இப்போது ஐபிஎல் தலைவராக இருந்திருந்தால், கோயங்காவை உடனடியாக தடை செய்து, அவரது அணி உரிமையை திரும்ப பெற்றிருப்பேன்” என்று லலித் மோடி ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே 2024 சீசனில் கேஎல் ராகுலிடம் கோயங்கா இதேபோல் நடந்துகொண்ட வீடியோ வைரலானதை சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற செயல்கள் ஐபிஎல் கண்ணியத்தை குலைப்பதாகக் கூறினார்.

மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், லக்னோ நிர்வாகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளதுடன், பண்ட் மீதான தனது நம்பிக்கையை கோயங்கா உறுதிப்படுத்தியுள்ளார். கேமராக்களில் தெரிவது முழுமையான உண்மை அல்ல என்றும், அணிக்குள் இணக்கமான சூழலே நிலவுவதாகவும் லக்னோ அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்