உலகம்

மனிதர்கள் இதுவரை பார்க்காத நிலவின் அற்புதமான புகைப்படம்.. Artemis II திட்டத்தில் சாதனை..!

50 ஆண்டுகளுக்கு பிறகு, மனிதகுலம் மீண்டும் நிலவை நோக்கி பயணிக்கும் வரலாற்று சிறப்புமிக்க Artemis II திட்டத்தில் நாசா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஏப்ரல் 1 அன்று விண்ணில் பாய்ந்த ஓரியன் விண்கலம், தற்போது பூமியிலிருந்து 70,000 மைல்களுக்கு அப்பால் நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது.

இந்த விண்கலத்தில் பயணிக்கும் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெரமி ஹேன்சன் ஆகிய நால்வர் அடங்கிய குழுவினர், நிலவின் ‘ஓரியண்டல் பேசின்’ பகுதியை மனித கண்கள் முதன்முறையாக நேரடியாக காணும் அற்புதமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

விண்கலத்திற்கு ‘இன்டெக்ரிட்டி’ என பெயரிட்டுள்ள வீரர்கள், விண்வெளியில் மேக் அண்ட் சீஸ் போன்ற உணவுகளை உட்கொண்டு, ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலவின் நெருக்கமான பயணத்திற்கு தயாராகி வருகின்றனர்.

கிறிஸ்டினா கோச், பூமியிலிருந்து அதிக தூரம் பயணித்த முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த 10 நாள் பயணம், மனிதன் மீண்டும் நிலவில் தடம் பதிப்பதற்கும், செவ்வாய் கிரக பயணத்திற்கும் ஒரு முன்னோட்டமாக அமையும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த