போடா போடி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்த படம் ஓடவில்லை. ஆனாலும் அவரின் மீது நம்பிக்கை வைத்து நடிகர் தனுஷ் தனது தயாரிப்பில் விக்னேஷ் சிவனுக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு கொடுத்தார். அப்படி உருவான திரைப்படம்தான் நானும் ரவுடிதான்.
இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நயன்தாராவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அதோடு, வில்லனாக பார்த்திபன் நடித்திருந்தார். இந்த படத்தை காமெடி கலந்து உருவாக்கியதால் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதோடு, பாடல்கள் ஹிட் ஆனது.
இந்நிலையில், அதன்பின் தானா சேர்ந்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல், எல்.ஐ.கே ஆகிய 3 படங்களையும் விக்னேஷ் சிவன் இயக்கினார். அதில், எல்.ஐ.கே இன்னமும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விக்னேஷ் சிவன் ‘நானும் ரவுடிதான் படத்தில் கதாநாயகனாக அனிருத் நடிக்க வேண்டியது. நான் அந்த படத்தின் கதையை பல நடிகர்களிடமும் சொன்னேன்.. ஆனால் யாரும் நடிக்க முன்வரவில்லை.. அப்போது அனிருத் ‘நானே நடிக்கட்டுமா?’ என்று கேட்டார்.
நாங்கள் போட்டோ சூட் வரை சென்றோம்.. அனைத்தும் தயாராக இருந்த சமயத்தில் கத்தி திரைப்படம் வெளியானது.. அதன் பின் இசையில் மட்டுமே அவர் கவனம் செலுத்த முடிவு செய்தார்.. அப்போதிலிருந்து அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராக மாறிவிட்டார்.. எனது வாழ்க்கையில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்’ என சொல்லியிருக்கிறார்.

