டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பின் பல அதிரடியான அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அதிக அளவு வரிகளை விதித்தார். இந்திய ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்றார்.. அப்படி வாங்கினால் இந்தியாவுக்கு அதிகமான வரி என மிரட்டினார்.. இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்தார். அதன்பின் அமெரிக்க உச்சநீதிமன்றம் அவரின் தலையில் கொட்டிய்து. எனவே, இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைத்தார்.
அதன்பின் ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கிறது என்று சொல்லி அந்த நாட்டின் மீது போரை துவங்கினார். அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை தாக்கியது. ஆனால் ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியது.. குறிப்பாக அமெரிக்காவுக்கு உதவி செய்யும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்த அந்த நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் வரவில்லை. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
ஒருவழியாக ஒரு மாதத்திற்கு மேல் நடந்து வந்த போர் நேற்று இரவோடு தற்காலிக முடிவுக்கு வந்தது.. இன்னும் இரண்டு வாரங்கள் அமெரிக்காவும் ஈரானும் போரை நடத்தமாட்டோம் என அறிவித்தது. இது ஈரான் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இந்நிலையில், திடீரென ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் அனைத்து நாடுகளின் மீதும் 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.. அதோடு இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இதில் எந்த விதிவிலக்கும் வழங்கப்படாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

