உலகம்

3 ஆயிரம் பேரை பலி வாங்கிய ஈரான் போர்!.. முடிவுக்கு வருமா?

ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. பிப்ரவரி மாதம் 28ம் தேதி துவங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேல் நடந்த நிலையில் நேற்றுதான் இரண்டு வாரங்கள் போர் நிறுத்தத்திற்கு ஈரானும், அமெரிக்காவும் ஒத்துக் கொண்டது.

போர் துவங்கியபோதே இஸ்ரேல் தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அதன்பின் அவரின் மகன் பொறுப்புக்கு வந்திருக்கிறார். போர் காரணமாக ஈரான் தனது கடல் வழி பாதையான ஹார்மோஸ் ஜலசந்தியை மூடிவிட்டது.. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை கொண்டுவரும் கப்பல்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது..

இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி ஈரானில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாக ஈரான் தடவில் துறை அறிவித்திருக்கிறது.. மேலும், இறந்தவர்களில் 40 சதவீத பேரின் உடல்களை அடையாளம் காண தடவியல் பணிகள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒருபக்கம், நாளை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாக்கில் அமெரிக்காவும், ஈரானுக்கும் இடையே போர் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.. இதில் நிரந்தர முடிவு எட்டப்பட்டால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அமெரிக்கா இதற்கு ஒப்புக்கொண்டாலும் இஸ்ரேல் தொடர்ந்து ஈரானை தாக்கி வருகிறது. லெபனானை தொடர்ந்து தாக்கியதில் நேற்று 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் கோபமடைந்த ஈரான் ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த