விஜய் நடித்துள்ள அவரின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் நேற்று இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.. அதைவிட பேரதிர்ச்சியாக முழு படமும் சில இணையதளங்களில் வெளியானது. இது படக்குழு மற்றும் தயாரிப்பாளரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து, படத்தை பகிர்ந்தாலோ, டவுன்லோட் செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஜனநாயகன் படத்தின் லீக் காட்சிகள் டிவிட்டர், டெலிகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தை சொன்ன தேதிக்கு வெளியிடாமல் போனதால் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் என்கிறார்கள்.. தற்போது முழு படமும் லீக் ஆகிவிட்டதால் கண்டிப்பாக டவுன்லோட் செய்து பார்த்தவர்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள்.. அதோடு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனத்தையும் பரப்பினால் கண்டிப்பாக இந்த படம் தியேட்டரில் வெளியாகும் போது பெரு நஷ்டத்தை சந்திக்கும் என கணிக்கப்படுகிறது.
இதையடுத்து ஜனநாயகன்தான் தனது கடைசி படம் என்ன சொன்னதை வாபஸ் வாங்கி கொண்டு இதே தயாரிப்பாளருக்கு விஜய் சம்பளம் வாங்காமல் அல்லது குறைவான சம்பளத்தில் இன்னொரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் சினிமா விமர்சகர்களும், தயாரிப்பாளர்களும் சொல்லி வருகிறார்கள்.

