தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். கடந்த சில வருடங்களாகவே கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். துபாய், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் நடந்த கார் ரேஸில் அவரின் டீம் விளையாடி வருகிறது.
இன்னும் சில வருடங்கள் அவர் தொடர்ந்து கார் ரேஸில் விளையாடுவார் என தெரிகிறது.
ஒருபக்கம் திரைப்படங்களைப் பொறுத்தவரை குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் அவர் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க போவதாக அறிவிக்கப்பட்டது.. ஆனால் அஜித் 155 கோடி சம்பளம் கேட்பதால் அந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை.
மும்பைக்கெல்லாம் சென்று தயாரிப்பாளர்களை தேடிப்பார்த்தார்கள். ஆனால் எதுவும் செட் ஆகவில்லை. இந்நிலையில்தான் இப்படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டி ஆந்திராவிலிருந்து ஒரு தயாரிப்பாளர் அஜித் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஆனால், இந்த மாதம் 5 நாள், அந்த மாசம் 10 நாள் என ஒவ்வொரு மாதத்திற்கும் இவ்வளவு நாட்கள்தான் ஷூட்டிங் வருவேன் என அஜித் சொன்னதை கேட்டு அவருக்கு மயக்கம் வராத குறைதானாம். இப்படி கால்ஷீட் கொடுத்தால் நான் எப்போது படத்தை முடிப்பேன் என்று சொல்லி வந்த வழியே போய்விட்டாராம் அந்த ஆந்திரா தயாரிப்பாளர்.

