இந்தியா

விஜய்க்கு அனுமதி.. உதயநிதிக்கு அனுமதி மறுப்பு!.. தேர்தல் ஆணையம் அதிரடி…

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து அரசியல் தலைவர்களும் சுறுசுறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் என எல்லாருமே பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கிறார்கள்.

தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.. அதன்பின் திருச்சியில் பிரச்சாரம் செய்தார்.. சமீபத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது தூத்துக்குடியில் அவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்து பல அரசியல் தலைவர்களும் அதிர்ந்து போனார்கள். இன்று அவர் சிவகங்கை மாவட்டத்தில் தவெக வேட்பாளருக்காக வாக்கு சேகரிக்க செல்கிறார். அங்கு காரைக்குடி உள்ளிட்ட பல இடங்களிலும் அவர் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மதுரை வந்த விஜய் அங்கிருந்து காரில் சிவகங்கை செல்கிறார்.

அதோடு, நாளை விஜய் கடலூரில் பரப்பரை செய்யவிருக்கிறார்.. இதற்கு அவருக்கு அனுமதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நாளை கடலூரில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டிருந்தார்.. ஆனால் முதலில் அனுமதி கேட்டவர் என்கிற அடிப்படையில் விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிவிட்டு உதயநிதிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்