கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்த திரைப்படம் ஜனநாயகன். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக படம் உருவானாலும் இந்த கதையில் பல மாற்றங்களை ஹெச்.வினோத் செய்திருந்தார். குறிப்பாக விஜய் அரசியலுக்கு வரும் வந்துவிட்டதால் அரசியல் தொடர்பான பல காட்சிகளையும் இப்படத்தில் சேர்த்திருந்தார்.
ஆனால் அதுவே இந்த படத்திற்கு எமனாக அமைந்துவிட்டது. இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்க முடியாது என தணிக்கை வாரியம் மறுத்துவிட்டது.. இதையடுத்து தயாரிப்பாளர் நீதிமன்றத்திற்கு சென்றார்.. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.. எனவே வழக்கை வாபஸ் பெற்று மறுதணிக்கைக்கும் விண்ணப்பித்தார். ஆனால் இப்போது வரை படம் மறுதணிக்கை செய்யப்படவில்லை.
அரசியல் தொடர்பான காட்சிகள் இருப்பதால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என சொல்லி தணிக்கை அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர். எனவே எப்போது ஜனநாயகன் படம் வெளியாகும் என்பது தெரியவில்லை. ஒருபக்கம் ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஏற்கனவே படம் சொன்ன தேதியில் வெளியாகாததால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது முழு படமும் இணையத்தில் வெளியாகி விட்டதால் தயாரிப்பாளருக்கு மேலும், சில நூறு கோடி நஷ்டம் ஏற்படும் எனத் தெரிகிறது.
இதையடுத்து ஜனநாயகனே தனது கடைசி படம் என்கிற முடிவை மாற்றி விஜய் கே.வி.என் நிறுவனத்திற்கு இன்னொரு படம் நடித்து கொடுக்க வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது. விஜய் அந்த தயாரிப்பாளருக்கு இன்னொரு படம் நடித்துக்கொடுக்க வேண்டும் என்பதே பல தயாரிப்பாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

