சினிமா

தலைவர் 173 இயக்குனர் யார்? அஸ்வந்த் மாரிமுத்துவா? சிபியா? – ராஜ் கமல் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

ரஜினிகாந்த் தனது நண்பர் கமல்ஹாசனுக்காக ஒரு படத்தில் நடித்து கொடுக்க முடிவெடுத்தார். தலைவர் 173 என்று அழைக்கப்படும் அந்த படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக முடிவானது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவந்தது. ஆனால் சில நாட்களிலேயே சுந்தர் சி அதிலிருந்து விலகினார். அவர் எதற்காக விலகினார் என்பது இப்போது வரை தெரியவில்லை.

இதனை அடுத்து ரஜினியில் அந்த படத்தை டான் வெற்றி படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு துவங்க சில நாட்களே உள்ள நிலையில் அவரும் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை. ஆனால் சிபிக்கு பதில் டிராகன் வெற்றி பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து ஒப்பந்தம் செய்யப்படிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் ஒரு சிலரோ இல்லை சிபி படத்தில் நீடிக்கிறார் என்றும், ரஜினி கூறிய கதையின் மாற்றங்களை செய்துகொண்டிருக்கிறார் என்றும் கூறுகிறார்கள் எது எப்படியோ ஒரு வேலை ரஜினி அஸ்வந்தை விரும்பினால் சிபியை நாம் வெளியேற்ற வேண்டாம், ஆவருக்கு நமது நிறுவனத்தில் வேறு படம் ஒன்றை கொடுக்கலாம் என்று ராஜ் கமல் பிலிம்ஸ் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்