இந்தியா

அமெரிக்காவின் TIME இதழுடன் இணைகிறது ரிலையன்ஸ்.. நீதா அம்பானி முக்கிய அறிவிப்பு..!

உலகின் புகழ்பெற்ற TIME இதழ் மற்றும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஆகியவை இணைந்து, இந்திய திறமையாளர்களை கௌரவிக்கும் வகையில் ‘TIME100 Next India’ என்ற புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளன.

நியூயார்க்கில் நடைபெற்ற TIME100 விழாவில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி மற்றும் TIME சி.இ.ஓ ஜெசிகா சிப்லி ஆகியோர் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தை அறிவித்தனர். இதன்படி, வரும் டிசம்பர் 2026-ல் மும்பையில் உள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் இதற்கான பிரம்மாண்டமான விழா நடைபெறவுள்ளது. இது TIME100 Next வரலாற்றில் ஒரு நாட்டிற்காக உருவாக்கப்படும் முதல் சர்வதேசப்பதிப்பாகும்.

கலை, அறிவியல், விளையாட்டு, வணிகம் மற்றும் சமூகப் பணி என பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் 100 இளம் இந்திய தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களை உலக அரங்கிற்கு அறிமுகப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

உலகின் சிறந்தவற்றை இந்தியாவிற்கு கொண்டு வருவதும், இந்தியாவின் சிறந்தவற்றை உலகிற்கு எடுத்து செல்வதுமே எங்களது லட்சியம்” என நீதா அம்பானி இவ்விழாவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 103 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட TIME இதழுடன் ரிலையன்ஸ் இணைந்துள்ள இந்த முயற்சி, இந்திய இளைஞர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க ஒரு பெரும் பாலமாக அமையும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்