இலங்கை

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பணி

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதித்துள்ளது என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் ஆரம்பமாகியது.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதனை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம், அகழ்வு பணிகளை முன்னெடுக்க ஏதுவாக புதைகுழி பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இரண்டாம் நாளான நாளைய தினம் செவ்வாய்க்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்