இந்தியா

கேரளாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்!. கருத்துக்கணிப்பில் தகவல்!

சமீபத்தில் தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதில் 140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அதில் ஆளும்கட்சியான சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எப் (LDF) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப் (UDF) ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

கேரளாவில் 2.7 கோடி வாக்காளிக்க தகுதியானவர்கள் என என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 890 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். கடந்த 2021 தேர்தலில் சிபிஎம் தலைமையிலான (LDF) 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. எனவே இந்த முறை யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு மக்களிடமிருந்தது.

இந்நிலையில்தான், தேர்தல் முடிவுகள் வருகிற மே 4ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது தேர்தலுக்குப் பிந்தையை கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. அந்தவகையில், கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி (UDF) ஆட்சி அமைக்கும் என பல கருத்துக்கணிப்புகள் கூறியிருக்கிறது.

VOTE VIBE நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் UDF 70-80 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், LDF 58 – 68 தொகுதிகளிலும் வெற்றிபெறும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

அதேபோல், P-MARQ வெளியிட்ட கருத்துக்கணிப்பில் UDF 71-79 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், LDF 62 – 69 தொகுதிகளிலும் வெற்றிபெறும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

அதேபோல், MATRIZE நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் UDF 70-75 தொகுதிகளிலும், LDF 60 – 65 தொகுதிகளிலும் வெற்றிபெறும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

அதேபோல், AXIS MY INDIA நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் UDF 78-90 தொகுதிகளிலும், LDF 49 – 62 தொகுதிகளிலும் வெற்றிபெறும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

அதேபோல், JVC நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் UDF 72-84 தொகுதிகளிலும், LDF 52 – 61 தொகுதிகளிலும் வெற்றிபெறும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

எனவே, இந்த கருத்துக்கணிப்புகள் படி பார்த்தால் கேரளாவில் இந்த முறை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்