சினிமா

உன்னை நம்பி நாடிருக்கு!.. இளையராஜா போட்ட வீடியோ.. விஜயை சப்போர்ட் பண்றாரா?!

நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பவர் விஜய். ஆனால், திரையுலகிலிருந்து அவர் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. அவருடன் நெருக்கமாக பழகியவர்கள், அவரின் படத்தில் நடித்தவர்களில் சிலர் மட்டுமே விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். சீனியர் நடிகர்களான ரஜினி, கமல் உள்ளிட்ட யாரும் விஜய்க்கு ஆதரவாக பேசவில்லை. ஆனால், விஜய் அதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை.

தன்னுடை ரசிகர்களையும், பொதுமக்களையும் நம்பி விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதல்நிலை வாக்காளர்களும், இளைஞர்களும் விஜயின் விசில் சின்னத்திற்கு வாக்களித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றிபெற முடியாது என்றாலும் அதிமுக, திமுக போன்ற கட்சிகள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதை தடுக்குமளவுக்கு விஜய் வாக்குகளை வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்தான், இசைஞானி இளையராஜா தனது யுடியூப் சேனலில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி 1988ம் வருடம் வெளியான இது எங்கள் நீதி படத்தில் இடம் பெற்ற ‘சின்ன தம்பி உன்னை நம்பி நாடிருக்கு’ என்கிற பாடலை பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் விஜய் சிறுவனாக நடித்திருப்பார். எனவே, தம்ப் லைனில் விஜய் புகைப்படத்தையும் இளையராஜா பகிர்ந்துள்ளார்.

இதை இளையராஜா தரப்பு சாதாரணமாக செய்தார்களோ என்னவோ விஜய் ரசிகர்கள் இதை இளையராஜா விஜய்க்கு ஆதரவு கொடுத்திருப்பதாக எடுத்துக்கொண்டனர். அதற்கு காரணம் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் ‘உன்னை நம்பி நாடிருக்கு’ என்கிற பாடலை இளையராஜா பகிர்ந்ததுதான் இதற்கு காரணம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்