சினிமா

திறமைக்கு இடமில்லையா? ஷோபனா போன்ற ஜாம்பவான்களைக் கூப்பிடுங்க.. ரியாலிட்டி ஷோக்களை வெளுத்த வனிதா

தமிழ் திரையுலகில் எதற்கும் அஞ்சாமல் தனது கருத்துகளைத் துணிச்சலாகப் பதிவு செய்பவர் நடிகை வனிதா விஜயகுமார். தற்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவர்களாகப் பங்கேற்பவர்களின் தகுதி குறித்து அவர் எழுப்பியுள்ள கேள்வி, சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

தளபதி விஜய் நடித்த மாணிக்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். தொடர்ந்து விஜயுடன் சந்திரலேகா, சின்னத்திரையில் கலாட்ட குடும்பம், சண்டே சமையல் என பல ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்துள்ளார். நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் கைகொடுக்காததால் திரையுலகில் ஒரு சிறிய இடைவெளி விழுந்தது. இருப்பினும், அவ்வப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் வனிதா, பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னத்திரையின் தவிர்க்க முடியாத ஒரு முகமாக மாறினார்.

சமீபகாலமாக இசை மற்றும் நடனப் போட்டிகளில் நடுவர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறித்து வனிதா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில்:

இப்போது இருக்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் சம்பந்தமே இல்லாதவர்கள் நடுவர்களாக இருக்கிறார்கள். ஒரு பாட்டுப் போட்டி என்றால் அதில் அனுபவம் வாய்ந்த பாடகர்களைத்தான் நடுவர்களாக அழைக்க வேண்டும். அப்போதுதான் போட்டியாளர்களுக்குச் சரியான நுணுக்கங்களைக் கற்றுத் தர முடியும்.

அதேபோல், நடனப் போட்டி என்றால் அதில் ஒரு டான்ஸ் மாஸ்டரையோ அல்லது நடிகை ஷோபனா போன்ற அந்தத் துறையில் இமாலய சாதனை செய்தவர்களையோ நடுவர் இருக்கையில் அமர வைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, ஏதோ நான்கு படங்களில் நடனம் ஆடிய சினிமாக்காரர்களைக் கொண்டு வந்து நடுவராக உட்கார வைக்கிறார்கள். இந்த கான்செப்ட் எதற்கு என்றே எனக்குப் புரியவில்லை.”

டிஆர்பி ரேட்டிங்கிற்காகத் திறமையானவர்களைத் தவிர்த்துவிட்டு, பிரபலமானவர்களை மட்டும் நடுவர்களாகப் போடும் போக்கை வனிதா கடுமையாகச் சாடியுள்ளார். வனிதாவின் இந்தப் பேச்சுக்குச் சமூக வலைதளங்களில் தற்போது ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது. வனிதா சொல்வதில் நூறு சதவீதம் நியாயம் இருக்கிறது. தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே நடுவர் இருக்கை வழங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் பரபரப்பாக இயங்கி வரும் வனிதா விஜயகுமாரின் இந்தத் துணிச்சலான பேச்சு, சின்னத்திரை தயாரிப்பாளர்களிடையே ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்