நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் இதுவரை எந்த நடிகரும் அரசியலுக்கு வந்து இப்படி ஒரு கூட்டம் கூடியதில்லை. பிரச்சாரம், ரோட் ஷோ என விஜய் எங்கு சென்றாலும் அவரை பார்ப்பதற்கு இளைஞர்களும், பெண்களும், பொதுமக்களும் கூடி விடுகிறார்கள்.
அதோட இந்த சட்டமன்றத் தேர்தலில் முதல் நிலை வாக்காளர்களும், இளைஞர்களும் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். எனவே கண்டிப்பாக ஒரு கணிசமான வாக்குகளை விஜய் வாங்குவார் என்றே கணிக்கப்படுகிறது.
ஏனெனில் இந்த முறை 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியியிருக்கிறது. கண்டிப்பாக இதற்கு முக்கிய காரணம் விஜய் என பலரும் நம்புகிறார்கள்., விஜய் வெற்றி பெற்று முதல்வராக மாறுகிறாரா இல்லையோ கண்டிப்பாக திராவிட கட்சிகளை பயமுறுத்தியிருக்கிறார். அதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
விஜய் ஓட்டுகளைப் பிரித்து நம்மை தோற்கடித்து விடுவாரோ வரை என்கிற பயம் அதிமுக, திமுக போன்ற கட்சிகளுக்கும் இருக்கிறது. ஆனால், அதை அவர்கள் வெளி காட்டாமல் இருக்கிறார்கள். இந்நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ‘தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். தேர்தல் முடிவுகள் வரும் போது மாணவர்கள் மற்றும் முதல் நிலை வாக்காளர்களிடையே தவெகவுக்கு சாதகமான வாக்கு மாற்றம்(Swing) ஏற்பட வாய்ப்புள்ளது’ என வைகோ கூறியிருக்கிறார்.

