விளையாட்டு

நடுவரின் அவுட் தீர்ப்பு குறித்த சர்ச்சை.. விராத் கோலியின் ஆவேசத்தால் பரபரப்பு..!

ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ரஜத் படிதாரின் ஆட்டமிழப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், அர்ஷத் கான் வீசிய எட்டாவது ஓவரில் படிதார் அடித்த பந்தை ஜேசன் ஹோல்டர் கேட்ச் பிடித்தார். ஆனால், அந்த கேட்சை பிடிக்கும் போது பந்து தரையில் பட்டதாக மறுஆய்வில் சந்தேகங்கள் எழுந்தன.

இருப்பினும், மூன்றாவது நடுவர் அந்த கேட்சை சரி என அறிவித்து படிதாரை ஆட்டமிழந்ததாக அறிவித்தார். இந்த முடிவால் ஏற்கனவே ஆட்டமிழந்து வெளியே அமர்ந்திருந்த விராட் கோலி மிகுந்த அதிருப்தி அடைந்தார். களத்திற்கு வெளியே இருந்த கோலி, நடுவர்களின் முடிவை எதிர்த்து மிகவும் ஆவேசமாக வாதிட்டது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐபிஎல் விதிமுறைப்படி , ஒரு பீல்டர் பந்தை பிடிக்கும்போது கை தரையில் படலாம், ஆனால் பந்து தரையில் படக்கூடாது.

ஹோல்டர் பந்தை தரையில் தட்டியது போல் தெரிந்தும் நடுவர் அவுட் கொடுத்தது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. படிதார் போன்ற முக்கியமான வீரர் சர்ச்சைக்குரிய முறையில் வெளியேறியது ஆர்சிபி அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

இந்த போட்டியில் 156 என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத்,15.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்