சினிமா

ஸ்வாகதா சொல்றது பொய்!. அது ஒரு லவ் மேட்டர்!.. பாடகி சுசித்ரா பகீர்!

தமிழ் திரைப்படங்களில் சில பாடல்களை பாடியவர் ஸ்வாகதா. சமீபத்தில் ஊடகமொன்றில் கொடுத்த பேட்டியில் சில பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். ஒரு இசையமைப்பாளருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரின் இசையில் சில பாடல்களை பாடியதாகவும், தன்னிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு இசையமைப்பாளர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார்.

குறிப்பாக ரிக்கார்டிங் தியேட்டரில் உள்ள ஒரு அறையில் அந்த இசையமைப்பாளர் தன்னிடம் பாலியல் ரீதியாக மோசமாக நடந்து கொண்டு அதை வீடியோ எடுத்து தன்னை மிரட்டியதாகவும் கூறியிருந்தார். மேலும் தேவைப்பட்டால் அந்த இசையமைப்பாளர் பெயரை வெளியிடுவேன் எனவும் கூறியிருந்தார். முக்கியமாக, நடந்ததை வெளியே சொல்லவேண்டாம் என அந்த இசையமைப்பாளர் தன் காலில் விழுந்து கெஞ்சியதாகவும் அவர் கூறியிருந்தார். அதோடு, அந்த இசையமைப்பளரால்தான் சென்னையை விட்டுவிட்டு ரிஷிகேஷ் வந்து ஒரு துணிக்கடை நிறுவனம் நடத்தி வருவதாகவும் ஸ்வாகதா கூறியிருந்தார்.. இதையடுத்து யார் அந்த இசையமைப்பாளர் என ரசிகர்கள் தேட துவங்கினார்கள்.

ஸ்வாகதா விக்ரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாயாவின் சகோதரி ஆவார். தனது சகோதரி மாயாதான் தன்னை காப்பாற்றியதாகவும் ஸ்வாகதா அந்த பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் ஸ்வாகதா சொன்னது எல்லாமே பொய் என பாடகி சுசித்ரா கூறியிருக்கிறார்.

ஊடகம் ஒன்றுக்கு அவர் கொடுத்த பேட்டீய்ல் ‘ஸ்வாகதா ஒரு வளர்ந்து வரும் பாடகி மட்டுமே. அவர் சொன்ன இசையமைப்பாளருடன் அவருக்கு காதல் இருந்தது. அது தோல்வியில் முடிந்தது. ஆனால், ஒட்டுமொத்த இசைத்துறையின் மீதும் அவர் பழி சுமத்துகிறார். அவர்களுக்கு இடையில் இருந்த Toxic ஆனது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு தன்னை ஏற்றுக்கொள்ளும்படி அந்த இசையமைப்பாளர் ஸ்வாகதாவை கெஞ்சினார். ஆனால் ஸ்வாகதா அவரை தூக்கி எறிந்துவிட்டார். அவரின் தங்கை மாயா இதுபற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதிலிருந்தே அதில் உண்மை இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு இடையேயான ஒரு போட்டி’ என கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்