விளையாட்டு

சிஎஸ்கே அணி பிளே ஆப்க்கு தகுதி பெற இன்னும் எத்தனை போட்டி வெல்லனும்?

ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 155 ரன்கள் மட்டுமே எடுக்க சிஎஸ்கே அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.

15 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி 5 தோல்வி என பத்து புள்ளிகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் தொடர்ந்து ஆறாவது இடத்தில் நீடிக்கிறது.

டெல்லி அணி 4 வெற்றி ஆறு தோல்வி என எட்டு புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 13 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ஆர் சி பி, சன்ரைசர்ஸ், ராஜஸ்தான், குஜராத் ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகள் உடன் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றது. இந்த சூழலில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் எஞ்சியுள்ள நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும்.

இதன் மூலம் 16 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தை பிடிக்க முடியும். ஒரு வேளை எஞ்சிய நான்கு போட்டிகள் வென்றால் சிஎஸ்கே அணி கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு சென்று விட முடியும். சிஎஸ்கே அணி இன்னும் லக்னோவுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டும். பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாட வேண்டும்.

இதேபோன்று டெல்லி அணியை பொறுத்தவரை எஞ்சியுள்ள நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே 16 புள்ளிகளை பெற முடியும். அப்போதும் கூட மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். எட்டாவது இடத்தில் உள்ள கொல்கத்தா அணிக்கும், ஒன்பதாவது இடத்தில் உள்ள மும்பை அணிக்கும்,பத்தாவது இடத்தில் உள்ள லக்னோ அணிக்கும் கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்று வாய்ப்பு முடிந்து விட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்