இந்தியா

தேர்தல் ஆணையம் உதவியுடன் வாக்குகளை திருடிவிட்டார்கள்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க சட்டமன்த் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்று மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த வெற்றி குறித்து பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கூறியதாவது:

தற்போதைய அரசின் தவறான செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதாகவும், குறிப்பாக இந்துக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பாஜகவிற்குப் பேராதரவு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் தேர்தலை சந்தித்ததாகவும், பாஜகவின் கூட்டு தலைமை இது குறித்து முடிவு செய்யும் என்றும் அவர் பதிலளித்தார்.

மறுபுறம், இந்த முடிவுகளை நிராகரித்துள்ள மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய படைகளின் உதவியுடன் பாஜக வாக்குகளை திருடியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பே 89 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும், பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை வேண்டுமென்றே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். தோல்வியைக் கண்டு அஞ்சாமல் தனது கட்சியினர் ‘புலிக்குட்டிகளை போல’ தொடர்ந்து போராடுவார்கள் என்றும் மம்தா சூளுரைத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்