ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார், இதற்கு பழி வாங்கும் விதமாக அமெரிக்கன் ராணுவ தளங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது.
இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கடல் வழியான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாகவே கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்தது.. ஒருபக்கம் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம், பாகிஸ்தான் முன்னெடுத்த அமைதிப்பேச்சுவார்த்தையால் கடந்து பல நாட்களாகவே ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து உடன்பாடு ஏற்படாமல் இருக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தானின் விமான தளத்தில் ஈரானிய போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்கா உறுதி செய்திருக்கிறது. செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் இது தெரிய வந்திருப்பதாக சொல்லும் அமெரிக்கா, அமைதிப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் நடுநிலையாளராக செயல்படுவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என அதிருப்தி தெரிவித்திருக்கிறது..

