இந்தியா

அடுத்தடுத்து அதிமுக நிர்வாகிகளை நீக்கும் ஈபிஎஸ்.. மீண்டும் ஆலோசனை செய்யும் வேலுமணி, எஸ்பி சண்முகம்..!

தமிழக வெற்றி கழக அரசுக்கு மறைமுக ஆதரவாக செயல்படும் அதிமுக நிர்வாகிகளின் பதவிகளை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அதிரடியாக பறித்து வருகிறார். இதுவரை 29 மாவட்ட செயலாளர்கள் வரை நீக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையால் அதிமுக உள்கட்சி வட்டாரத்தில் பெரும் பதற்றமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது.

இந்த இக்கட்டான அரசியல் சூழ்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அதிமுக மூத்த தலைவர் சி.வி.சண்முகத்தின் இல்லத்தில் இன்று ஒரு முக்கிய அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுகவின் முன்னணி தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் கலந்துகொண்டனர்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த தொடர் பதவி பறிப்பு நடவடிக்கைகள், த.வெ.க-வுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று டி.டி.வி.தினகரன் விடுத்துள்ள எச்சரிக்கை மற்றும் அடுத்தடுத்து கட்சியின் மாவட்ட செயலாளர்களை மாற்றுவதால் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும், உள்கட்சிப் பூசல்களைக் கட்டுப்படுத்தி, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் தங்களது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் இந்த மூத்த தலைவர்கள் விரிவாக ஆலோசித்துள்ளனர். இந்தத் திடீர் சந்திப்பு தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்