இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

 

டுபாயை தளமாகக் கொண்ட சேவை வழங்குநர் ஒருவரின் மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பினரால் ஊடுருவப்பட்டுள்ளமையினால் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளது

சேவை வழங்குநர் ஒருவருக்குச் செலுத்தப்பட வேண்டிய 9 லட்சத்து 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம்ஸ் பணம் கிடைக்கவில்லை என டுபாயில் உள்ள சேவை வழங்குநருக்கு கிடைக்கப்பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்த விடயம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் -அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஊடாக இடம்பெற்றதாகக்கூறப்படும் நிதி மோசடிகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார்

இந்த பிண்ணனியில் ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் இந்தியாவின் சென்னை இலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் உத்தியோகபூர்வ விளக்கமளித்துள்ளது.

சேவை வழங்குநர் ஒருவருக்குச் செலுத்தப்பட வேண்டிய 9 லட்சத்து 74,000 ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹம்ஸ் பணம் கிடைக்கவில்லை என டுபாயில் உள்ள சேவை வழங்குநருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளக விசாரணைகளைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிக்கு சமூகமளிப்பதைத் தவிர்த்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் இந்திய சட்ட அமுலாக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இழப்பீட்டை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஊடாக இடம்பெற்றதாகக்கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஊடகவியலாளர்களின்hல் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்