தமிழ்நாட்டின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக செல்வி எஸ். கீர்த்தனா அவர்களும், (Guidance Tamil Nadu அமைப்பின் புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச்செயல் அதிகாரியாகத் திரு. தீபக் ஜேக்கப், IAS அவர்களும் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த மிக முக்கிய நிர்வாக மாற்றங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய நிம்மதியையும் பெருத்த வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய தொழில் துறை அமைச்சர் மிகச்சிறந்த தகவல் தொடர்புத் திறன் கொண்டவராகவும், புதிய கைடன்ஸ் சிஇஓ அரசு நிர்வாக நடைமுறைகளை மிக துல்லியமாக அறிந்தவராகவும் இருப்பது தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
தமிழகத்தின் பொருளாதார இராஜதந்திரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் இந்த புதிய கூட்டணி மிக முக்கிய பங்காற்றும் என்று சர்வதேச வர்த்தக வல்லுநரான கியுங்ஹூன் கிம் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.
இந்த அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள், மாநிலத்தில் புதிய வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதோடு மட்டுமின்றி, தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை மேலும் எளிமையாக்கி ‘பெர்ஃபெக்ட் கவர்னன்ஸ்’ நிர்வாக பாணியைத் தமிழ்நாட்டில் நிலைநிறுத்தும் என்று உலகளாவிய வர்த்தக வட்டாரங்கள் பெரிதும் நம்புகின்றன.

