உலகம்

காற்றிலிருந்து பெட்ரோல், டீசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்.. சக்சஸ் ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.10?

திரைப்படங்களில் வருவது போன்ற ஒரு ஆச்சரியமான தொழில்நுட்பத்தை ஜப்பான் கண்டறிந்துள்ளது. காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுத்து, நேரடியாக பெட்ரோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருளை தயாரிக்கும் முறையை ஜப்பானின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான ‘ஈனியோஸ்’ உருவாக்கியுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் முதல் கட்டத்தில், ‘டைரக்ட் ஏர் கேப்சர்’ முறை மூலம் காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு பிரிக்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில், சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தி, நீரிலிருந்து ஹைட்ரஜன் பிரித்தெடுக்கப்படுகிறது. இறுதியாக, இவை இரண்டும் ‘பிஷர்-ட்ரோப்ஸ்’ எனும் வேதியியல் செயல்முறை மூலம் இணைக்கப்பட்டு, செயற்கை எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இது பாரம்பரிய பெட்ரோல், டீசலை போலவே வாகனங்களில் சிறப்பாக செயல்படுகிறது.

தற்போது தினமும் ஒரு பேரல் எரிபொருள் தயாரிக்கப்பட்டு, டொயோட்டா போன்ற நிறுவனங்களின் வாகனங்களில் சோதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் பெரிய அளவில் வெற்றிபெற்றால், பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டர் 10 ரூபாய்க்கு விற்கும் நிலை வரலாம் என வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த