சினிமா

மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் உதயநிதி ஸ்டாலின்!

கலைஞர் கருணாநிதியின் பேரன், மு.க ஸ்டாலின் மகன் என்கிற அடையாளத்தோடு அரசியலிலும், சினிமாவிலும் களமிறங்கியவர் உதயநிதி. ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்கிற நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளராகவே உதயநிதி சினிமாவில் அறிமுகமானார். இவர் தயாரித்த முதல் படமான குருவில் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின் பல படங்களையும் உதயநிதி தயாரித்தார். அதேபோல், பல படங்களை வாங்கியும் வெளியிட்டார்.

ஒருகட்டத்தில் சினிமாவில் நடிப்பது என முடிவெடுத்தார் உதயநிதி. உதயநிதி முதன் முதலாக ஹீரோவாக நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்பின் நடித்த படங்கள் அவ்வளவாக ஓடவில்லை. சந்தானத்தை தன்னுடன் வைத்துக்கொண்டு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார் உதயநிதி.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. மாமன்னன் படம் வெற்றி பெற்றதும் இனி மூன்று வருடங்களுக்கு நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறினார் உதயநிதி. அதே போல் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்