ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம் ஜனநாயகன். இந்த வருட பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டனர். ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.
எனவே தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. ஆனால் எதுவும் நடக்கவில்லை.. கடந்த பிப்ரவரி மாதம் வழக்கை வாபஸ் பெற்றதோடு மறுதணிக்கைக்கும் விண்ணப்பித்தார். ஆனால் அது நடந்து 2 மாதங்களாகியும் இதுவரை படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.
விஜய் அரசியலுக்கு வந்ததே இதற்கு காரணம் என விஜய் ரசிகர்கள் பாஜக அரசை குற்றம் சாட்டினார்கள்.. ஒருபக்கம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்து விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். இதையடுத்து ஜனநாயகன் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த படம் எப்போது ரிலீஸ் என செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த படத்தின் தயாரிப்பாளர் ‘படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை.. எப்போதும் வேண்டுமானாலும் கிடைக்கும்.. சான்றிதழ் வந்த பிறகு ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி சொல்லப்படும்.. கூடிய விரைவில் கிடைக்கும். சென்சார் சான்றிதழ் கொடுப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்’ என அவர் கூறியிருக்கிறார்.

