போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். நயன்தாரா, விஜய் சேதுபதியை வைத்து இவர் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படம் ஹிட் படமாக அமைந்தது. அதன்பின் அந்த படம் உருவாகும்போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதலும் மலர்ந்தது. அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மேலும் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராக மாறிவிட்டனர்.
நானும் ரவுடிதான் படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல், எல்.ஐ.கே ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சினிமாவில் உதவி இயக்குனராக வேலை செய்வதற்கு முன் கவர்ச்சி நடிகை சோனாவிடம் சில வருடங்கள் விக்னேஷ் சிவன் வேலை செய்திருந்தார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சோனா ‘விக்னேஷ் சிவன் என் ஆபீஸ்லதான் மூன்று வருடங்கள் வேலை செய்தார். எனக்கு நிறைய உதவிகள் செய்தார்.. சில விஷயம் சொல்லிடுவேன்.. ஆனா நயன்தாரா மீது ரொம்ப மரியாதை இருக்கு.. அவங்களும் என்னை மாதிரி நிறைய கஷ்டப்பட்டு இன்னைக்கு ஒரு குடும்பமாக இருக்காங்க.. அதுக்காக விக்னேஷ் சிவன் கெட்டவன் கிடையாது.. ஆனா என்னை மறந்துட்டானோன்னு வருத்தம் இருக்கு.. என்ன பண்றது.. வாழ்க்கை மாறிடுச்சு அவ்வளவுதான்’ என கூறியிருக்கிறார்.

