சினிமா

தியாகராஜன் குமாரராஜா படத்தில் நடிக்கும் கார்த்திக் சுப்பராஜ்!

குறும்படங்களை இயக்கி வந்தவர் கார்த்திக் சுப்பராஜ். விஜய் சேதுபதியை வைத்து பீட்சா என்கிற படத்தை இயக்கி கவனம் ஈர்த்தார். ஆனால் அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் கார்த்திக் சுப்பராஜ் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை ரசிகர்களுக்கு காட்டியது. அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. ரஜினியை வைத்து பேட்ட என்கிற திரைப்படத்தையும் இயக்கினார். விஜய், அஜித்தை ஆகியோரை வைத்து பட்மெடுக்க இவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதேநேரம் விக்ரம், சூர்யா ஆகியோரை வைத்து படங்களை இயக்கினார்.

ஒருபக்கம் கார்த்திக் சுப்பராஜ் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில்தான், இதுவரை படங்களை இயக்கி மட்டுமே வந்த கார்த்திக் சுப்பராஜ் முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய திரைப்படங்களை இயக்கி ஈர்த்த தியாகராஜன் குமாரராஜா தற்போது விஜய் சேதுபதியை வைத்து பாக்கெட் நாவல் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக கார்த்திக் சுப்பராஜ் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா என்பதால் கார்த்திக் சுப்பராஜ் நடிக்கும் மேடம் காமெடி கலந்த கதாபாத்திரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்