நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தபோது திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த கொலை மற்றும் பாலியல் பலாத்காரங்கள் பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார். முதல்வர் ஸ்டாலினால் காவல்துறையை கட்டுக்குள் வைக்க முடியவில்லை என்று பேசினார். தற்போது தவெக வெற்றி பெற்று விஜய் முதல்வராகிவிட்ட நிலையில் பல குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தற்போது திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், முன்னாள் துணை முதல்வர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார். கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.
இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது. இந்த சோபா மாடல் அரசு அமைஞ்சது முதல், கொலை – கொள்ளை – பாலியல் வன்கொடுமைன்னு குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.

