சினிமா

அஜித் படம் வேண்டாம்!.. அந்த ஹீரோவிடம் கதை சொல்லி ஓகே பண்ணிய ஆதிக் ரவிச்சந்திரன்…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தாலும் அஜித்தின் அடுத்த படம் இதுவரை துவங்கப்படவில்லை. குட் பேட் அக்லி ஹிட் என்பதால் ஆதிக்கே தனது அடுத்த படத்தையும் இயக்கட்டும் என்கிற வாய்ப்பை அஜித் கொடுத்தார்.

ஆனால், அஜித் 185 கோடி சம்பளம் கேட்டதால் தயாரிப்பாளர் யாரும் கிடைக்கவில்லை. 100 கோடி என்றால் படத்தை துவங்கலாம் என தயாரிப்பாளர்கள் கறாராக சொல்லிவிட்டார்கள். ஆனால், அஜித் தனது சம்பளத்தை குறைக்க முன்வரவில்லை. குட் பேட் அக்லி படம் வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், அஜித்தின் புதிய படம் துவங்கப்படவில்லை.ஒருபக்கம், அஜித்தும் கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்திலிருந்து விலகிவிடலாம் என ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்துள்ளாராம். தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை சந்தித்து ஒரு கதையை சொல்லியிருக்கிறார். அவருக்கு கதை பிடித்துவிட தற்போது அடுத்தகட்டத்தை நோக்கி சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, அஜித் நடிக்க வந்தால் அவரின் படத்தை சிறுத்தை சிவா இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்