சினிமா

சம்பளத்தை விட்டு கொடுத்த ஹெச்.வினோத்!.. கறாரா வாங்கிய ஆர்.ஜே.பாலாஜி!

சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். அதன்பின் தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கினார். விஜயை வைத்து இவரை ஏற்றிய ஜனநாயகன் திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த படத்திற்கு எப்போது தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என்பது தெரியவில்லை.

இதனால் கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய படம் இப்போது வரை வெளியாகவில்லை. விரைவில் படத்திற்கு சென்சார் கிடைத்துவிடும்.. படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில்தான் ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. படம் இவ்வளவு நாட்களாக வெளியாகாததால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் என்கிறார்கள். அதோடு இணையத்திலும் இந்த படம் லீக் ஆனது. அந்த வகையிலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம். இந்த படத்திற்கு ஹெச்.வினோத்துக்கு 12 கோடி சம்பளம் பேசப்பட்டு 6 கோடி மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தற்போது தயாரிப்பாளர் அடைந்த நஷ்டத்தை பார்த்துவிட்டு அந்த 6 கோடியை கேட்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ஹெச்.வினோத். ஒரு பக்கம் கருப்பு படத்தின் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு படத்தை வெளியிடவே கஷ்டப்படுகிறார் என தெரிந்தும் கூட தனது 12 கோடி சம்பளத்தை ரிலீஸுக்கு முன்பே கறாராக வாங்கி விட்டாராம். இதுதான் மனசுக்கும் பெரிய மனசுக்கும் இருக்கிற வித்தியாசம் என திரையுலகில் பேசி வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்