இலங்கை

கபில சந்திரசேன உயிரிழந்த அறையிலிருந்து மீட்கப்பட்ட மர்மப்பொருள்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரண விசாரணைக்காக 19 மற்றும் 20 ஆவது சாட்சிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன அழைப்பாணை விடுத்துள்ளார்.

குறித்த இரு சாட்சிகளையும் எதிர்வரும் 5 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை. கபில சந்திரசேன மரணமடைந்த வீட்டின் அறையில் ஒரு பச்சை நிறப் பட்டை கண்டெடுக்கப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு இன்று நீதிமன்றில் தெரிவித்திருந்தது.

கண்டெடுக்கப்பட்ட பட்டியை அரச ரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அத்துடன் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நபரும் அடையாளம் காணப்படவில்லை என்று கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மரணமடைந்தவரின் கையடக்கத் தொலைபேசியை அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பதற்கு நீதி அமைச்சின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று நீதிமன்றில் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்