இந்தியா

பிளம்பர் வேலை!. மாசத்துக்கு 2 லட்சம் வருமானம்!. டெல்லியை கலக்கும் இளைஞர்!

டெல்லியில் பிளம்பர் மாசம் 2 முதல் 3 லட்சம் வரை சம்பாதித்து வருவதாக நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படித்து பெற்ற வேலையில் வாங்கும் சம்பளத்தை விட பலரும் படிக்காமல் சுய தொழில் மூலம் சம்பாதிப்பது அதிகமாகவே இருக்கிறது. அதிலும் தினமும் வருமானம் பார்க்கும் தொழில் செய்பவர்கள் மாத சம்பளம் வாங்குபவர்களை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள். அதனால்தான் ‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்.. கவலை இல்லை ஒத்துக் கொள்’ என முன்னோர்கள் சொன்னார்கள்.

இந்நிலையில்தன், டெல்லியை சேர்ந்த ஐ.ஐ.எம். பட்டதாரி ஒருவர் எக்ஸ் தளத்தில் ‘நான் ஒரு பிளம்பரை எனது வீட்டில் உள்ள சவரை மாற்றுவதற்காக அழைத்தேன். அவர் 15 நிமிடத்தில் அதை செய்து முடித்துவிட்டு 700 ரூபாய் கேட்டார். தினமும் அதுபோல 5 முதல் 6 வேலைகளை செய்து மாசத்திற்கு 4 ஆயிரம் வரை சம்பாதிப்பதாக அவர் கூறியிருக்கிறார், இதுபோக கோடை காலங்களில் ஏசியை ஃபிட் செய்வது, ஏசி சர்வீஸ் செய்வது போன்ற பணிகளையும் அவர் செய்து வருவதாகவும், மொத்தத்தில் மாதம் இரண்டு முதல் மூன்று லட்சம் வரை கூட அவர் சம்பாதிப்பதாக அவர் பதிவிட்டிருந்தார்.

AI வளர்ச்சியால் பல அலுவலக வேலைகள் பாதிக்கப்படலாம் என்றாலும் பிளம்பிங் போன்ற தொழிலை கற்றுக் கொள்வதால் சாப்ட்வேர் துறையில் பணிபுரிவதை விட அதிகமாக சம்பாதிக்க முடியும் என அந்த இளைஞர் பதிவிட்டிருக்கிறார்.

இதை சிலர் ஏற்றுக்கொண்டாலும் பலரும் எல்லோருக்கும் அது போன்ற வேலை அமையாது.. ஏசி தொடர்பான சர்வீஸ் எல்லாம் கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் மற்ற நேரத்தில் கிடைக்காது. ஆனாலும் தினமும் சம்பாதிக்கும் சொந்த தொழில் மாச சம்பளத்தை எதிபார்த்து ஒரு இடத்தில் பணிபுரிவதை விட சிறந்துதான் என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்