இந்தியா

ரிசல்ட்டுக்கு பின் டிவியை உடைச்சிட்டு உதயநிதி அழுதார்!… சவுக்கு சங்கர் பேட்டி!

சவுக்கு மீடியா நிறுவனர் மற்றும் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் இந்த செய்தியாளர்களிடம் பேசியபோது ‘ மே 4ம் தேதி மாலை தேர்தல் ரிசல்ட் வெளியானவுடன் உதயநிதி ஸ்டாலின் டிவியை உடைத்து விட்டு தனது அம்மாவிடம் போய் ‘விஜயையெல்லாம் நான் எப்படி முதல்வராக பார்ப்பது?’ என்று ஒப்பாரி வைத்தார்.

இதையடுத்து, சேகர் பாபு உள்ளிட்ட சிலரை அழைத்த துர்கா ஸ்டாலின் ‘தம்பி அழுவுது.. நீங்கலாம் எதுக்கு இருக்கீங்க?. போய் எதாவது பண்ணுங்க’ என சொன்ன பிறகுதான் சேகர் பாபு உள்ளிட்ட சிலர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசியிருக்கிறார்கள். அதாவது ‘நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கிறோம். நீங்கள் ஆட்சி அமையுங்கள். நீங்கள் முதலமைச்சராக இருங்கள். ஆனால் விஜய் முதல்வராக வரக்கூடாது’ என சொன்னார்கள்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் பேச்சுவார்த்தை அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முதலில் தெரியாது. ஒருபக்கம் சிவி சண்முகம், பி.எஸ் வேலுமணி போன்றவர்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முன் வந்தார்கள். அப்போது அவர்களை அழைத்து பேசிய பழனிச்சாமி ‘பொறுமையாக இருங்கள்.. திமுக ஆதரவில் நாம் ஆட்சியமைக்க போகிறோம்’ என சொல்ல சிவி சண்முகம், எஸ்.பி வேலுமணி ஆகியோர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். திமுக ஆதரவில் நாம் ஆட்சி அமைத்தால் மக்கள் நம்மை காரி துப்புவார்கள் என அவர்கள் சொன்னதை பழனிச்சாமி கேட்கவில்லை.. திமுக வெளியில் இருந்துதான் ஆதரவு கொடுக்கிறார்கள். நமது ஆட்சிதான் நடக்கப்போகிறது என்று கூறியிருக்கிறார்..

அதனால்தான் அதிமுக எம்.எல்.ஏக்களை பாண்டிச்சேரியில் தங்க வைத்தார்கள். அப்போது செய்தியாளர்களிடம் ‘இரண்டு நாட்களில் நிலைமை மாறும்’ என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதுக்கு அர்த்தம் இதுதான். திமுகவின் ஆதரவால் அதிமுக ஆட்சி அமைப்பதால் திமுக கூட்டணியில் உள்ள விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் மற்றும் பாமக என எல்லா கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டார். திமுக கூட்டணிக்கு 15 அமைச்சரவைகளை கொடுக்க பழனிச்சாமி ஒத்துக் கொண்டார்’ என்று சவுக்கு சங்கர் சொல்லியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்