ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் தாக்குதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். இதையடுத்து அமெரிக்கா ராணுவ தடங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது.
மேலும் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு வரப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. ஒரு மாதத்திற்கு முன்பு அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஹார்மூஸ் நீரினை மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக அமெரிக்காவும், ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஒருபக்கம், லெபனானை இஸ்ரேல் தாக்கியது. மேலும், ஈரான் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தவே ஹார்மூஸ் நீரிணையை முழுவதுமாக மூடிவிட்டது.
இந்நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். ஈரானின் எண்ணெய் உள் கட்டமைப்பு மையமாக இருக்கும் தீவை கைப்பற்ற விரும்புகிறோம். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.. ஈரான் மீது இன்றும் கடுமையான தாக்குதலை நடத்துவோம்..
ஈரானின் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்களை தாக்க விரும்பவில்லை. அமெரிக்காவின் தாக்குதல் மிகவும் சக்தி வந்ததாக இருக்கும்’ என கூறியிருக்கிறார். ஒருபக்கம் ஈரானுடன் அமைதி பேச்சு வார்த்தை என சொல்லிவிட்டு ஒருபக்கம் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

