கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டன்சர்ச் நகரைச் சேர்ந்த 63 வயது ஓய்வுபெற்ற ஆசிரியர் நைஜல் ஏ, தனது வாழ்நாளில் மூன்றாவது முறையாக லாட்டரி பரிசை வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் அவர் பெற்ற இந்த தொடர் வெற்றிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நைஜல் முதன்முதலில் 2014 ஆம் ஆண்டு லாட்டரி பரிசை வென்றார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு 250,000 டாலர்களை பரிசாகப் பெற்றார். தற்போது மெக்கெல்லர் பொது அங்கடியில் வாங்கிய 50 டாலர் மதிப்பிலான ‘இன்ஸ்டன்ட் கேஷ் இன் மல்டி-வின்’ சீட்டு மூலம் 50,000 டாலர்களை மூன்றாவது முறையாக வென்றுள்ளார். டொராண்டோவில் உள்ள பரிசு மையத்தில் தனது காசோலையைப் பெற்றுக்கொண்ட அவர், இது ஒரு கனவு போல இருப்பதாகத் தெரிவித்தார்.
கிடைத்த பரிசுத் தொகையைக் கொண்டு மலைப்பகுதிகளில் பயணிக்கும் ஏடிவி வாகனம் ஒன்றை வாங்கவும், ஹோண்டுராஸ் நாட்டிற்கு விடுமுறைப் பயணம் மேற்கொள்ளவும் அவர் முடிவு செய்துள்ளார். லாட்டரி உள்ளிட்ட அனைத்து வகை சூதாட்டங்களும் அபாயகரமானவை என்பதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

