ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கி கிட்டதட்ட நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அதேநேரம் கடந்து சில நாட்களாகவே அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்தப்பட்டது.
ஆனாலும், கடந்த சில நாட்களாக ஹார்மூஸ் நீரிணை அருகே அமெரிக்காவுக்கும், ஈராணமும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. ஒருபக்கம் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்காவும், ஈரானும் தொடர்ந்து பேசி வருகிறது. ஒரு பக்கம் ஈரானின் நட்பு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று கூட இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் சிலர் இறந்துவிட்டனர்.
இந்நிலையில், செய்தியாளரிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘அமெரிக்கா – ஈரான் இடையே நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சவுதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. ஐரோப்பாவில் நாளை அல்லது ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தாகும்’ என்று கூறியிருக்கிறார்.
மேலும், ஈரான் நாட்டை இப்போதைக்கு தாக்கும் திட்டம் எங்களிடம் இல்லை. இரவு தாக்குவதாக சொன்னது ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

