இந்தியா

இனி மொபைலில் தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வராது.. மத்திய அரசு அறிமுகம் செய்யும் DND செயலி..

இந்தியாவில் மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு தினசரி தலைவலியாக இருக்கும் தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் விளம்பர குறுஞ்செய்திகளை எளிதாக தடுத்து நிர்வகிக்கும் வகையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ‘Do Not Disturb’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் பயனர்கள் தங்களின் மொபைல் போன் வழியாகவே தேவையற்ற விளம்பர தொடர்புகளை கட்டுப்படுத்த முடியும்.

இந்த TRAI DND செயலி மூலம் பயனர்கள் தங்களுக்கு முழுமையான DND வேண்டுமா அல்லது குறிப்பிட்ட சில விளம்பர பிரிவுகளை மட்டும் தடுக்க வேண்டுமா என்பதை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் தடுக்கப்பட்டாலும், முக்கியமான வங்கி எச்சரிக்கைகள் மற்றும் சேவை சார்ந்த குறுஞ்செய்திகள் தடையின்றி வந்து சேரும். பயனர்கள் தங்களின் விருப்பங்களை மாற்றியமைக்க மொபைல் நிறுவனங்களை அழைக்க தேவையில்லை; செயலிக்குள் சென்று OTP சரிபார்ப்பு மூலம் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.

அனைத்து முன்னணி மொபைல் சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் இந்த செயலியை பயன்படுத்த முடியும். இந்தியாவில் ஆன்லைன் மோசடிகளும் ஸ்பேம் அழைப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், TRAI அமைப்பின் இந்த எளிய டிஜிட்டல் கருவி மொபைல் பயனர்களுக்கு தங்களின் தனியுரிமையை பாதுகாத்து கொள்ளவும், மன அழுத்தமில்லாத தொலைத்தொடர்பு அனுபவத்தைப் பெறவும் பெரிதும் உதவுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்