சினிமா

ஜீவா – எம். ராஜேஷ் கூட்டணியின் ஜாலியா இருந்த ஒருத்தன் : டீஸர் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி என்ற ஒற்றைப் படம் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கட்டிப்போட்ட மாஸ் கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது. நடிகர் ஜீவா மற்றும் காமெடி படங்களின் ஸ்பெஷலிஸ்ட் இயக்குனர் எம். ராஜேஷ் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ஜாலியா இருந்த ஒருத்தன் . தலைவர் தம்பி படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜீவா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட்டில் இப்போதே எகிறிக்கிடக்கிறது.

இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தன. தற்போது படக்குழுவினர் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படுதீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். லவ் டுடே படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் இவானா இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்எம்எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன்,’ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் காமெடி படங்களை கொடுத்த ராஜேஷ், தன் வழக்கமான பாணியில் 100% எண்டர்டெய்னராக இப்படத்தை உர்ருவாக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். SMS மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இருக்கும் நிலையில், இந்த கூட்டணியின் இசை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைத்தளங்களில் வைரலானது. கலர்ஃபுல்லான அந்த போஸ்டரைத் தொடர்ந்து, தற்போது படத்தின் அடுத்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் வருகிற ஜூன் 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜீவா – ராஜேஷ் – யுவன் கூட்டணி இணைந்துள்ளதால், தியேட்டர்களில் மீண்டும் ஒரு செம்ம காமெடி கலாட்டா கேரண்டி என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்